அதை செய்யாமல் இருப்பது நல்லது! ஈரானின் எச்சரிக்கைக்கு டிரம்பின் கடுமையான பதில்
அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு, வரலாற்றில் மிகவும் கொடூரமான நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கு பதிலளித்துள்ளார்.
அதன்படி, ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக. அவர்கள் அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லது,
ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பாரிய குற்றம்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களுக்கு எதிராக வரலாற்றில் "மிகவும் கொடூரமான" நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், ஆயத்துல்லா அலி கமேனியின் கொலையை "ஒரு பாரிய குற்றம்" என்று கண்டித்துள்ளார். அத்துடன் இதற்கு பதிலடி கொடுப்பதாக அவரது அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மாபெரும் குற்றத்திற்கு ஒருபோதும் பதிலளிக்கப்படாமல் போகாது, தலைவரின் தூய இரத்தம் ஒரு கர்ஜிக்கும் நீரூற்று போலப் பாயும். இஸ்லாமிய உலகம் மற்றும் ஷியா மதத்தின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பும்.
இந்த மாபெரும் குற்றத்தைச் செய்தவர்களையும் தளபதிகளையும் வருத்தப்பட வைப்போம் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri