டுபாய் பொலிசாரின் காவலில் இருந்து தப்பிச் சென்ற இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்
டுபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கையில் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கூறப்படும் தர்மசிறி பெரேரா என்ற 'ரத்மலானே தர்மே' இரகசியமாக தப்பி சென்றுவிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தர்மசிறி பெரேரா கைது செய்யப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவர் இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கோனகோவிலவைச் சேர்ந்த பாதாள உலகத் தலைவர் அஞ்சுவின் பிரதான உதவியாளர் என்று கூறப்படும் ரத்மலானே தர்மே, நாட்டில் இடம்பெற்ற பல குற்றங்கள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக தர்மசிறி பெரேராவை கடந்த ஆண்டு டுபாய் பொலிசார் கைது செய்தனர்.
சந்தேக நபர் இலங்கைக்கு அழைத்து வர இலங்கை பொலிசார் முயன்ற போதிலும் இரகசியமாக தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri