மீண்டும் சரியும் டொலரின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 238.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 224.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 342.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 379.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், நேற்றுடன் ஒப்பிடுகையில் (04.07.2023) ஒப்பிடுகையில் இன்றையதினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.
You My Like This Video
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri