தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்! ராஜபக்ச தரப்பு அதிரடிக் குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே மகிந்த ராஜபக்சவை அவரது முதிய வயதிலும் தேசிய மக்கள் சக்தி அரசு சித்திரவதை செய்து பழிவாங்குகின்றது என்றுமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(15) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை, அவர் குணமடைந்து வருகின்றார்.

எனினும், மனைவியின் உதவி அவருக்குத் தேவைப்படும் இந்த வேளையில்தான் ஷிரந்தி ராஜபக்வை அரசு சிறையில் அடைத்துள்ளது.
மருந்து வழங்குவதற்கேனும் மனைவி அருகில் இருக்க வேண்டும் அல்லவா? ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்துள்ளனர், அதனால்தான் அவர்களைச் சிறையில் அடைக்கின்றோம் எனக் காண்பிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது.
ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவந்த காரணத்தினாலேயே மகிந்த ராஜபக்ச பழிவாங்கப்படுகின்றார் என்பதே உண்மையாகும்.
மகிந்தவின் பெயர்
பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே இந்த அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதனால் தமிழ் புலம்பெயர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும், நாட்டுக்காகச் சேவையாற்றிய மகிந்த ராஜபக்ச தனது முதிய வயதில் பழிவாங்கப்படுவது குறித்து இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் கவலையில் உள்ளனர்.
மகிந்தவையும் அவரது பெயரையும் அழிப்பதற்கு இந்த அரசு என்ன செய்தாலும், மக்களின் மனங்களில் மகிந்தவுக்கு உள்ள அன்பும் மரியாதையும் ஒருபோதும் நீங்காது. அது இருந்ததைவிடவும் அதிகரிக்கும்.

‘மகிந்த ராஜபக்ச என்பவர் இந்நாட்டின் அரசியல் கலாசாரம்’ என அநுரகுமார திஸாநாயக்கவே குறிப்பிட்டிருந்தார்.
அப்படிப்பட்ட தலைவரை முதிய வயதில் சித்திரவதைக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல. வரலாற்றில் மகிந்தவின் பெயர் தங்க எழுத்துகளாலேயே எழுதப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
திடீரென்று மாற்றப்பட்ட திட்டம்! நீதிமன்றத்தைத் தவிர்த்து புத்தசாசன அமைச்சை நோக்கி விரையும் பிக்குகள்