ஞானசார தேரருக்காக ஆயிரம் காவி உடைகள்! ஜனாதிபதிக்கு கஸ்ஸப தேரரின் கடுமையான எச்சரிக்கை..

Colombo Galagoda Aththe Gnanasara Thero
By Shadhu Shanker Oct 16, 2026 06:48 AM GMT
Report

ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதி உடனடியாகத் தமது பதவியை விடடு விலக வேண்டுடம் என்று வேண்டும் என பாலங்கொட கஸ்ஸப தேரர் வன்மையாக வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தடை செய்து, இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து பலாங்கொட கஸ்ஸப தேரர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

போராட்டப் பேரணி 

கண்டியிலிருந்து பாதயாத்திரையாக கொழும்புக்கு வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிக்குகளின் பங்கேற்புடன் இந்தப் போராட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 9ஆவது சரத்தின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை ஜனாதிபதிக்கு நினைவூட்டுவதே இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்காக ஆயிரம் காவி உடைகள்! ஜனாதிபதிக்கு கஸ்ஸப தேரரின் கடுமையான எச்சரிக்கை.. | Kassappa Thero Press Meet Aboy The Protest

அத்துடன், அரசியலமைப்பின் 34(1) ஆவது சரத்தையும் கருத்திற்கொண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைதியான முறையில் பிரித் ஓதி, தியானத்தில் ஈடுபட்டு தமது கோரிக்கைகளை முன்வைக்க வந்த பிக்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொலிஸாரும் பத்தரமுல்லையில் உள்ள அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் நிலைமையை வன்முறையாக மாற்ற முயற்சித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், அவ்வாறான குழப்பங்களுக்கு இடமளிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தேவைப்பட்டிருந்தால் கொழும்பு நகரின் நடவடிக்கைகளை முழுமையாக முடக்குவதற்கும் பிக்குகளால் முடிந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேலி செய்து கூச்சலிடுபவர்கள்

இருப்பினும், தாங்கள் சட்டபூர்வமான மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்ட வழிமுறைகளிலேயே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், காவி உடைக்கும் பௌத்த சாசனத்திற்கும் எதிராக இடம்பெறும் அவமதிப்புகள் தொடர்பாகவும் கஸ்ஸப தேரர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிலர் பேருந்துகளிலும் வாகனங்களிலும் பயணித்தவாறு பிக்குகளைப் பார்த்து கேலி செய்து கூச்சலிடுவதாகவும், இதனைத் தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கெமரா மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி அறைகளுக்குள் இருந்து ஆபாசமான வார்த்தைகளால் பிக்குகளை அவமதிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக உடனடியாகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞானசார தேரருக்காக ஆயிரம் காவி உடைகள்! ஜனாதிபதிக்கு கஸ்ஸப தேரரின் கடுமையான எச்சரிக்கை.. | Kassappa Thero Press Meet Aboy The Protest

இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஞானசார தேரருக்காகப் பாரிய அடையாள நிகழ்ச்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டுள்ள பின்னணியில், ஒரு காவி உடைக்குப் பதிலாகப் புதிதாக ஆயிரக்கணக்கான காவி உடைகளைத் தைத்து, காவி நிறத்தில் சாயமிடும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் நிபந்தனையற்ற முறையில் விடுதலையான பின்னர், அவரை நேரில் சந்தித்து அந்தக் காவி உடையை வழங்குவதே தமது நோக்கம் எனக் குறிப்பிட்ட கஸ்ஸப தேரர், இந்தப் புண்ணிய நிகழ்வில் பங்கேற்குமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பௌத்த மக்களுக்கும் திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி

ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி



2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US