ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (17) மேலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது, இன்று முறையே 297.64 ரூபாவாகவும், 305.11 ரூபாவாகவும் உள்ளது.
நேற்று, (16) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 297.30 ரூபாவாகவும், 304.81 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும், வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
