புலம்பெயர் தமிழர்கள்- வெளிநாட்டு வாழ் இலங்கையர்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பு: அரசாங்கம்
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் புலம்பெயர் தமிழர்களையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையும் ஒன்றிணைத்து தேசியக் கூட்டமைப்பை உருவாக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், முதற்கட்ட நடவடிக்கையாக ஈழக் கருத்தியலுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைத் துரிதப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தப் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
மகா சங்க உறுப்பினர்கள்
கனடாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான றோய் சமாதானம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பல்லேகம ஹேமரத்தன தேரர் ஆகியோருக்கு இடையில், இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசர்கள் காலத்திலிருந்தே தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு மகா சங்க உறுப்பினர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இந்தநிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் ஏனைய மக்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று ஹேமரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் போது பெருமளவிலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இனி இதுபோன்ற மோதல்கள் ஏற்படாமல் நல்லிணக்கத்துடன் வாழத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்று கனேடிய தமிழரான ரோய் சமாதானம் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
