புலம்பெயர் தமிழர்களின் முதலீடு இங்கு வரப்போவதில்லை: ராஜ்குமார் தெரிவிப்பு (VIDEO)
சுமந்திரனும், சம்பந்தனும் தமிழர்களுக்குச் செய்த எந்த காரியம் எமக்கு நன்மை பயக்கும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் எதிர்காலம்
அத்துடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறிய உதவவும், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சங்கம், கூட்டம், மதம் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் சுதந்திரங்கள் ஆரோக்கியமான ஜனநாயகம் மற்றும் வலுவான சிவில் சமூகத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்த விழுமியங்கள் ஒவ்வொரு மனிதனையும் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாக்கும் மற்றும் குறித்த விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய தலைவர்கள் தமக்குத் தேவை.
| தமிழர்களின் சாபமே இன்று சிங்களவர்களின் கோபமாக மாறியுள்ளது: கணபதிப்பிள்ளை மோகன் |
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசியல் உரிமைகளோ பொருளாதார பலமோ இன்றி திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் இராணுவத்தினராலும் உளவு முகவர்களாலும் கண்காணிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி
எனினும் தமிழர்களுக்கு இறையாண்மை இல்லாத வரை, நமது பணக்காரர்கள், உயர் கல்வியறிவு மற்றும் திறமையான புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து முதலீடு இங்கு வரப்போவதில்லை.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் கைகோர்த்து தமிழர்களுக்கு ஆதரவளிக்க மறுத்த இந்திய அதிகாரிகளின் ஆணையை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டு டலஸ்க்கு வாக்களித்தார்கள்? இந்தியா நமது நண்பன் அல்ல.
அவர்கள் எமது நண்பரை போல செயல்படுகிறார்கள், ஆனால் இந்தியர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்பட இலங்கையை அச்சுறுத்த தமிழர்களை இந்தியா பயன்படுத்துகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி சுமந்திரனும் சாணக்கியனும் சீனத் தூதுவரை இரகசியமாகச் சந்தித்தது ஏன்? அனுமதி கொடுத்தது யார்? இவர்கள் இருவரும் தங்களது சொந்த நலனுக்காக சீனர்களை ரகசியமாக சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மாவை தமிழரசு கட்சியை சீர்திருத்த வேண்டும், இல்லையெனில் கட்சியை விட்டு விலக வேண்டும். கொழும்பில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை வடக்கு, கிழக்கு அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் இது. அவர்களின் கடந்த கால செயலால் இன்றும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே வரலாறு.
வடக்கு, கிழக்கில் பிறந்த தமிழ்த் தலைமைகள் தமிழர் தாயகத்தில் தமிழர்களைக் கவனித்து வந்ததையும் வரலாறு காட்டுகிறது. 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நடத்தை தமிழர்களுக்கு சங்கடமாகவும், வெட்கமாவும் உள்ளது. தமிழரசு கட்சி கூட்டம் நடத்தி சுமந்திரனை ஒழிக்க வேண்டிய தருணம் இது. சுமந்திரன் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் தற்போதும் ஒரு புற்று நோய்.

அரசியல்வாதிகள் தேவை
தமிழர்களுக்கு நன்மை பயக்கும் அல்லது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் புதிய தலைமுறை இளம் தமிழ் அரசியல்வாதிகள் தேவை.
தமது அரசியல் தீர்மானத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்பதையும் நாங்கள் அறிவோம்.
தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்கு ஆதரவைப் பெற ஐரோப்பாவிற்கும்
அமெரிக்காவிற்கும் பயணிக்கக்கூடிய இளம் அரசியல்வாதிகள் தேவை. மாவை கட்சியை
செம்மைப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் விரைவில் அழியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam