தமிழர்களின் சாபமே இன்று சிங்களவர்களின் கோபமாக மாறியுள்ளது: கணபதிப்பிள்ளை மோகன்

Sri Lanka Police Ranil Wickremesinghe Sri Lankan Peoples President of Sri lanka
By Kumar Aug 02, 2022 07:37 AM GMT
Report

தமிழர்களின் சாபமே இன்று சிங்களவர்களின் கோபமாக மாறியுள்ளது எனவும், இலங்கையின் அடையாளமான ராஜ முத்திரையாக பார்க்கப்பட்ட ராஜபக்சர்கள் தமிழர்களின் சாபம் காரணமாக இலங்கையின் அசிங்கமான சின்னமாக மாற்றப்பட்டுள்ளார்கள் என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(1) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், "அண்மையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. அதன் மூலமும் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு விமோசனம் கிடைத்ததாக தெரியவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் 

பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் முற்றாக நீக்கப்பட வேண்டும். ஏராளமான தமிழ் கைதிகள் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

புதிய அரசாங்கத்தினை அமைத்துள்ள ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் உணர்வாளர் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றது.

தமிழர்களின் சாபமே இன்று சிங்களவர்களின் கோபமாக மாறியுள்ளது: கணபதிப்பிள்ளை மோகன் | Repealed Immediately I Mohan Demands

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடளாவிய ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்காக தமிழ் மக்களில் நலன் கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து குரல் கொடுக்கவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தெளிவூட்டல் அவசியமாகயிருக்கின்றது. அரசியல் தெளிவின்மை காரணமாகத்தான் சமூகத்திற்கு தேவையற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படும் நிலை காணப்படுகின்றது.

கிராமம் கிராமமாக சென்று வாக்கு பலத்தினால் மக்கள் எதனை சாதிக்கமுடியும் என்பதை தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. அந்த தெளிவூட்டல் செயற்பாடுகளை அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.

தமிழர்களின் சாபமே இன்று சிங்களவர்களின் கோபமாக மாறியுள்ளது: கணபதிப்பிள்ளை மோகன் | Repealed Immediately I Mohan Demands

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் இன்று தமிழ் சமூகத்தின் முன்னிலை கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது.

எந்த நாடுகள் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் பேசுவதற்கான அமைப்பாக அது காணப்படுகின்றது. தமிழர்களின் உரிமைசார்ந்த விடயங்களில் அவர்கள் பின்வாங்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விடயத்தில் எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்ககூடாது.வடக்கு கிழக்கு இணைந்து கிழக்கு மாகாணம் தனித்துவமாகயிருக்கவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US