மருத்துவமனையில் இருந்து திடீரென சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்
சிறைச்சாலை மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த கைதிகள் பலர் திடீரென்று சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த, இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடமாற்றம்..
அதன் பிரகாரம் இதுவரை காலமும் உண்மையான மருத்துவக்காரணங்கள் இன்றி மருத்துவர்கள் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் தயவில் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டவர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை சுமார் 67 அளவில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




