தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிளவு! அதிர்ச்சி தகவல் அளிக்கும் திலித்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிளவு ஒன்று உருவாவதற்கான சூழல் நிலவுவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தங்களுடன் கலந்துரையாடும் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று பம்பலபிட்டியிலுள்ள கோவிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் பிளவு
தொடர்ந்துரையாற்றிய அவர், அரசாங்கத்தில் பிளவு ஒன்று உருவாகும் சூழலில் அரசை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இச் சந்தர்ப்பத்தை சூழ்ச்சிகள் மூலம் முறியடிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை பல கோணங்களில் செயற்படுத்த எடுக்கும் முயற்சியை நான் எப்போதும் ஏற்கொள்ள போவதில்லை.அவற்றுக்கு நாம் அகப்படப் போவதும் இல்லை.
அரசாங்கம் ஆட்சியமைத்த விதமும் அது செயற்படும் விதமும் அனுசரணை வழங்குவோரின் செற்பாடுகளை பார்க்கும் போது ஏதோ ஒரு சூழ்ச்சி நடைபெறுகிறது.இதனால் உண்மையான எதிர்க்ட்சியின் வகிபாகம் மழுங்கடிப்படுகிறது. அராங்கத்தை இயக்கும் முக்கோண முக்கியஸ்தர்கள் யார் என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.
அரசாங்கத்தை சூழ்ச்சிகள் மூலம் கவிழ்ப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே எனது நோக்கமாகும் என கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




