ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அறிந்தும் வெளியிடாத அரசு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிழக்கு 53ஆவது இராணுவப் படைப் பிரிவின் புலனாய்வு குழுவின் விரிவான அறிக்கைகள் கிடைக்கப் பெற்றும் பிரதான சூத்திரதாரியின் பெயரை அரசாங்கம் ஏன் வெளியிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் விவாதத்தின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் கட்டளை தளபதியின் கீழ் இருந்த கிழக்கு 53ஆவது இராணுவ படைபிரிவின் புலனாய்வு குழு 2018.12.08, 2018.12.14, 2019.01.03ஆம் திகதிகளில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இரு பொலிஸார் கொல்லப்பட்டமை
அத்தோடு வவுணதீவில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விரிவான விசாரணை அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அன்றைய பிரதானியான நிலந்த ஜயவர்தன அன்றிருந்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், NTG தலைவர் சஹ்ரானும் அவர்களின் குழுவும் ஜியாத் என்ற பெயரில் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என விரிவான விளக்கங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் விட்டு விட்டு பிரதான சூத்திரதாரியை தேடும் செயற்பாடு தேவையற்றதாகும் என நினைகிறேன்.
மேலும், முன்னாள் கிழக்கு கட்டளை தளபதியாக இருந்த தற்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவின் குழுவினரே விசாரணைகள் நடத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




