இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஓய்வு! வயதெல்லை இதுதான்: நாடாளுமன்றில் அறிவிப்பு
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் 60 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இளைய தலைமுறையினரின் நலனுக்காகச் செய்யுங்கள்
60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மஹாதீர் முகமட் அல்லது லீ குவான் யூ போன்றவர்கள் என நினைத்து வேலை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
65 வயது வரை இருந்த அரசுப் பணி ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பது நல்லது, இளைய தலைமுறையினரின் நலனுக்காக அதைச் செய்ய வேண்டும் .
ஆனால் இது நாடாளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.