அதிகமாக விடுப்பு எடுக்கும் அரச ஊழியர்கள்
அரச ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் நாட்கள் அதிகம் என அரசாங்கத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
365 நாட்களில் அரச ஊழியர்கள் 191 நாட்களே தமது கடமைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
149 விடுமுறைகள்
இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது சேவையில் 45 ஊதிய விடுமுறைகள் உள்ளன. தோராயமாக 149 பொது விடுமுறைகள் உள்ளன.
அதன்படி, சராசரியாக 365 நாட்களில் 191 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் தீவிரமான பிரச்சினை இது. இது குறித்து விரைவில் விசாரிக்குமாறு உற்பத்தித்திறன் செயலகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம் என்றும் கூறினார்.