யாழ். பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகம்
யாழ். பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கொண்டாடப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
செய்தி: ராகேஷ்
வல்வெட்டித்துறை
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் நிகழ்வு வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கொண்டாடப்பட்டது.
இதன்போது பொதுமக்களுக்கு எள்ளுப்பாகு இனிப்புகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
செய்தி: கஜிந்திரன்
நல்லூர்
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) விடுதலைப்புலிகளின் தலைவர் 68வது பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
குறித்த யாசகர் குடும்பம் சரியான வறுமையில் இருக்கையிலும், தனது சொந்த செலவில் இனிப்புகளை வாங்கி ஆலயத்திற்கு வருகைவோருக்கு மன ஆனந்தத்தோடு கொடுத்து மகிழ்ந்திருந்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கஜிந்திரன்