மகிந்த அரசியலில் இருந்து இனி ஒதுங்கவேண்டும்: 'மொட்டு'க்குள் வலுக்கின்றது எதிர்ப்பு

Basil Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan political crisis
By Rakesh Dec 01, 2022 08:23 AM GMT
Report

ஸ்ரீலங்கா பெரமுன கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து அந்தக் கட்சிக்குள் இருந்து எழ ஆரம்பித்திருக்கின்றது.

ராஜபக்ச குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்குக் காரணம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

ராஜபக்சவினர் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை

மகிந்த அரசியலில் இருந்து இனி ஒதுங்கவேண்டும்:

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான மக்கள் எதிர்ப்பால் ராஜபக்சவினர் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவானது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவால் நியமிக்கப்பட்டபோதும், அது இன்னமும் முழுமை பெறவில்லை.

அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருக்கும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல்களைக் காதில் போட்டுக் கொள்ளாது செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் உள்ளார் என்றும் பேசப்படுகின்றது.

தனது சகோதரர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியுற்றுள்ள மகிந்த ராஜபக்ச இப்போது அனைத்து விடயங்களிலும் கடும்பிடியில் இருக்கின்றார் என்று கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்ச இனி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

நெல்சன் மண்டேலாவிற்கு கிடைத்த கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்

மகிந்த அரசியலில் இருந்து இனி ஒதுங்கவேண்டும்:

இதற்கு முன்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,

"மகிந்த இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். மகிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்.

அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.

நெல்சன் மண்டேலாவின் மரணத்தின்போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, முன்னாள் நிதி அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படுகின்றது என்று கூறப்படுகின்றது. 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US