ஜனகவை நியமித்த கோட்டாபய! மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மை - நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தார் என நாடாளுமன்ற உறப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிலையையிட்டு கவலையடைய வேண்டும். ஒரு தரப்பினரின் நோக்கத்துக்கு அமைய செயற்படாத காரணத்தால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தார்.
ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கேள்வியெழுப்பும் தரப்பினர் ஏன் ஆரம்பத்தில் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. நாட்டு மக்களின் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்காகவே ஒரு சில ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை சிறந்த உதாரணமாக குறிப்பிட வேண்டும்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு சார்பாகவே செயற்பட்டார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி விட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
சிறிது காலம் தலைமறைவாக இருந்தார் தற்போது வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே அரசியல் நோக்கம் என்று குறிப்பிட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை காலவரையறையின்றி பிற்போட்ட சார்ள்ஸை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்து விட்டு மக்களுக்காக குரல் கொடுத்த ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது எந்தளவில் நியாயமாகும்.நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
