வெளிநாட்டு பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண் பொலிஸ் அதிகாரி
கொழும்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணப் பொதியை மீண்டும் அவரிடம் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையளித்துள்ளார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாய வீதியில் தொலைந்து போன பணப்பையை, அதன் உரிமையாளரான பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள், இந்த நேர்மையான செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய பிரஜை
யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் சம்மன்மாலி என்ற பெண் அதிகாரிகள், இந்த செயற்பாட்டை முன்னெடுத்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பணப்பொதியை தவறவிட்ட சப்ரீனா கேமரூன் என்ற பிரித்தானிய பிரஜை, பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவரின் உடமைகள் கையளிக்கப்பட்டன.
குறித்த பெண் தவறவிட்ட பணப்பொதியில் பெருந்தொகை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.