ஐசிசி தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்தார் சமாரி
துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் ஐசிசி தெரிவு செய்து அவர்களை அந்தந்த மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக அறிவிக்கும்.
அதன்படி ஜூலை மாதத்தின் சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் சமாரி அத்தப்பத்து (Chamari Athapaththu) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை தொடர்
இலங்கையில் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சமாரி அத்தப்பத்து சிறப்பாக விளையாடியதோடு இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இதனால் சமாரி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமாரி அத்தப்பத்து பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் 304 ரன்கள் குவித்ததுடன் இவரது சராசரி 101.33 ஆகும்.
மேலும், ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இங்கிலாந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
