இலங்கைக்கு எதிரான தொடர்: உபாதைக்குள்ளான இங்கிலாந்தின் முன்னணி வீரர்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணி தலைவர், பென் ஸ்டோக்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தி ஹண்ட்ரட் தொடரில் நோர்தென் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக நேற்றைய போட்டியில் விளையாடிய அவருக்கு போட்டியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
குறித்த ஆட்டத்தில் மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் கடந்திருந்தார்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டி
இந்நிலையில் இவர், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது இவருடைய உபாதை தொடர்பில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இவர் விளையாடுவார? இல்லையா? என்பது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பாகவுள்ளது.
இந்த தொடருக்கான குழாத்திலிருந்து ஷெக் கிரவ்லே ஏற்கனவே விலகியுள்ளதுடன், பென் ஸ்டோக்ஸின் உபாதை தீவிரமடைந்தால் இங்கிலாந்து அணிக்கு இதுவொரு பாரிய இழப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
