கம்பீரின் அறிவுரையை தூக்கியெறிந்த மூத்த வீரர்கள்
இந்திய அணி வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து 2025 ஜனவரி மாதம் வரை பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில் பங்களாதேஸ_க்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி செப்டம்பர் மாதமும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டி ஒக்டோபர் மாதமும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் நவம்பர் டிசம்பர் மாதமும் நடைபெறவுள்ளன.
கம்பீரின் முயற்சி
இந்த போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சம் ஏழு அல்லது எட்டு ஆட்டங்களில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர்(Gautam Gambhir) டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இதன்படி செப்டம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகும். இந்த போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா அஸ்வின் போன்றவர்கள் விளையாடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கம்பீர் அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கம்பீரின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.
முன்னதாக,விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 20க்கு 20 உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு தங்களது குடும்பத்துடன் வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தனர்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை
இந்த நிலையில் கம்பீர் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றத்தை அடுத்து மூத்த வீரர்கள் ஒருநாள் அணிக்கு திரும்பினால் சிறப்பாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தங்களது சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்றனர்.
அத்துடன் அவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தான் துலீப் கிண்ணப் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என்ற கம்பீரின் அறிவுறுத்தலுக்கு ரோஹிட் சர்மாவும் விராட் கோலியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தாங்கள் தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் தங்களது உடல் தகுதி பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
பெரிய டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு முன்னர் கொஞ்சம் ஓய்வு தேவை என்பதால் தங்களால் துலீப் கிண்ணத்தில் விளையாட முடியாது என அவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் முறையிட்டுள்ளனர்.
இதற்கிணங்க, ரோகித் சர்மா,விராட் கோலி, பும்ரா ,அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு துலீப் கிண்ணத்தில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விலக்கு அளித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |