பெங்களூரு விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் மூவர் கைது
இந்தியா, பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) சர்வதேச தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று இலங்கை பிரஜைகளை விமான சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மூவரும் கொழும்பில் இருந்து சென்ற நிலையில், கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11.9 மில்லியன் இந்திய ரூபாய்
அவர்கள் தமது மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் குழு கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் எனவும், இதன் மதிப்பு சுமார் 11.9 மில்லியன் இந்திய ரூபாய்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மூவரும் தங்க கடத்தல் வலையமைப்பிற்கு முகவர்களாக பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam