இலங்கையிலிருந்து குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஆராய புதிய குழு
இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
புதிய குழு
இதற்கமைய இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக நான்கு அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை குரங்குகளுக்கு (Toque macaque) சீனாவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது எனவும், சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறும் சீன பிரதிநிதிகள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை
இலங்கையில் தற்போது குரங்குகளின் எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியுள்ளதாகவும், உள்ளூர் பயிர்களுக்கு விலங்குகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் சீனாவினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இது நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையை மீறும் பிரச்சினையை தீர்க்க உதவும் என்று விவசாய அமைச்சகம் தெரவித்துள்ளது.