இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள்! எழுந்துள்ள சர்ச்சை
இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து பழமைவாத அமைப்பு ஒன்று இன்று (12.04.2023) தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஒரு விலங்கு வேறொரு நாட்டிற்கு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது ஒரு மிருகக்காட்சிசாலைக்கு மாத்திரமே பரிமாற்றமாக அனுப்பப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான செயல்

இதை தவிர்த்து, இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்குகளை வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது.
இந்நிலையில் சீனா, இலங்கை குரங்குகளை கேட்கிறது என்றால், அவர்கள் எதற்காக குரங்குகளை கேட்கிறார்கள்? எவ்வளவு குரங்குகள் தேவைப்படுகின்றது? என்பதில் எமது அதிகாரிகள் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri