மாலியிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கை இராணுவப்படையினர்
மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இராணுவப்படையினர் நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இராணுவப் படையினரே நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி 14 524 மில்லியன் ரூபா வருமானத்துடன் மாலியிலிருந்து இலங்கை படையினர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக அவர்கள் இலங்கைக்கு ஈட்டிய அந்நியச் செலாவணியின் அளவு 14524 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மாலியில் நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து இலங்கை இராணுவப்படையினர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளுக்காக 1099 இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் 14 பணிநிலை அதிகாரிகளும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் கீழ் இயங்கி வந்த மாலியில் உள்ள பன்முக ஒருங்கிணைந்த ஸ்திரத்தன்மை நடவடிக்கை தலைமையகத்தின் இராணுவ போக்குவரத்துக் குழுவிற்காக இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் பணிகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து நாடு திரும்பியுள்ளனர்.
மாலி அமைதி காக்கும் பணியின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய கேணல் பின்சர விக்ரம ஆராச்சியினால் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவிடம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய நாடுகளின் கொடி சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
