சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள யாழ். மாநகர சபையின் பிரதி மேயர்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 26ஆம் திகதி சீனாவுக்குப் பயணமாகவுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதிவரை அங்கு நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார்.
சீன விஜயம்
டிஜிட்டல் பொருளாதார நிர்வாகம் மற்றும் தலைமைத்துவ ஆளுமையைக் கட்டியெழுப்பும் சர்வதேச பரிமாணங்களுக்கான நிகழ்வுகள் சீனாவில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவகத்தால் உலக டிஜிட்டல் பொருளாதார நகரங்கள் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில், இலங்கையில் இருந்து மேயர்கள், பிரதி மேயர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள் என 19 பேர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri