தேர்தலை விட மக்களுக்கு உணவும் சுகாதாரமுமே முக்கியம்: ஹரின்
தேர்தலை விட மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார தேவைகளே அவசியம் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்ற போதிலும் அது ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா என்பது சந்தேகமே. அந்த நாளில் தேர்தல் நடக்காது என்பதே எனது உறுதியான கருத்து.

அமைச்சரவை மாற்றம்
தேர்தலை விடவும் முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளன. அவை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது.
தேர்தலை விடவும் மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார தேவைகளே அவசியம். அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னரே அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலரும் ஐக்கிய தேசியக்
கட்சியுடன் இணைவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam