பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஹரின் பெர்னாண்டோ
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஜேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பயண மற்றும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்ற போது, மாலைத்தீவைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட பகிரங்க கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
மாலைத்தீவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு பல சலுகைகள் உள்ளன என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
My statement made in Berlin regarding the beautiful Maldive islands has been taken out of context and been misrepresented on social media. I wish to clarify that we work together with our neighbor on tourism and would like to apologize for any inconvenience caused
— Harin Fernando (@fernandoharin) March 13, 2023
சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் நிறைய சலுகைகள் உள்ளன என்று அமைச்சர் பங்கேற்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவின் கடற்கரைகளுக்காக நிறைய பேர் பயணம் செய்கிறார்கள், ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு நீங்கள் சோர்வடைவீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மாலைத்தீவுக்கு வருமாறு ஹரினுக்கு அழைப்பு
இந்தநிலையில் ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு, மாலைத்தீவின் சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாலைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஷிஃபாவ். இது குறித்து வெளியிட்ட தமது கருத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக உலகின் முன்னணி இலக்கு விருதை மாலத்தீவு பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல், வண்ணமயமான பவளத் தோட்டங்கள் கொண்ட வெள்ளை மணல் மற்றும் செழுமையான நீலக் கடலை அனுபவிப்பதற்கு போதுமான நேரம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மாலைத்தீவுக்கு வருமாறு அவர், இலங்கையின் அமைச்சர் ஹரினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை மாலைத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவுஸ் தனது டுவிட்டர்
பதிவில், 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகின் முன்னணி சுற்றுலா
இடமாக மாலைத்தீவு தெரிவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
