நீதிபதிகள் பற்றாக்குறை குறித்து கவலை வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம்
உயர்நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் வெற்றிடம்
குறித்த ஊடக அறிக்கையில், “நீதிபதிகளின் வெற்றிட பிரச்சினைகளுக்கு தீர்மானமிக்க முடிவு எட்டப்பட வேண்டும்.
இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதன்காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |