நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரின் இல்லத்தில் திடீர் சோதனை! அதிகாலை வரை வாக்குமூலங்கள் பதிவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் இல்லத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றால் சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
வாக்குமூலங்கள் பதிவு
நேற்று (16) இரவு சுமார் 10.30 மணியளவில் தொடங்கி இன்று (17) அதிகாலை சுமார் 4.30 மணி வரை நீடித்த இந்த சோதனையில் அதிகாரிகள் வீடு முழுவதும் சோதனையிட்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே கூறியுள்ளார்.

இந்த திடீர் சோதனை மற்றும் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் அல்லது அதற்கான சட்டப் பின்னணி குறித்து சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ அல்லது விளக்கத்தையோ வெளியிடவில்லை என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை இன்று பிற்பகலுக்குள் ஊடகங்களுக்கு வெளியிட நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.