அவுஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பில் வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான குரல்பதிவு ஒன்று மெல்பேர்ன் நீதிமன்றத்தில் நேற்று ஒலிபரப்பப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு மெல்பேர்னிலுள்ள வீடொன்றில் கணவனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் இறுதி தருணங்களின் போது பதிவான குரல்பதிவே இவ்வாறு ஒலிபரப்பபட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய நெலோமி பெரேரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது 45 வயதான கணவர் தினுஷ் குரேரா இந்தக் கொலையைச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனைவி கொலை
45 வயதான தினுஷ் குரேரா என்ற கணவர் குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வீட்டுக்கு வந்து கொலையை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

குறித்த இலங்கைப் பெண் தனது பிள்ளைகளின் முன்னிலையில் கொல்லப்பட்டபோது, உதவிக்காக அவர் அலறுவது அவரது கைக்கடிகாரத்தில் பதிவாகியுள்ளது.
அந்த குரல் பதிவு நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது. தினுஷ் குரேரா தனது 43 வயது மனைவியைக் கொன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்ற தனது மகனையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
திருமண உறவு
கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், சந்தேக நபர் இலங்கையிலிருந்து மெல்பேர்ன் திரும்பியிருந்தார். இவரின் மோசடி நடவடிக்கைகளினால் குறித்த பெண் தமது திருமண உறவை முடித்துக் கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலையின் பின்னர் தம்பதியினரின் 17 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் சந்தேக நபரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் பொலிஸாரை அழைத்தால் அல்லது வெளியேற முயன்றால், வீட்டிற்கு தீ வைத்து அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும், இந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியதில் அவரது உடல் உறுப்புகளில் 35 காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அதிபர் தெரிவித்துள்ளார். 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        