புதுக்குடியிருப்பில் வர்த்தகருக்கு கொலை அச்சுறுத்தல்
புதுக்குடியிருப்பில் வர்த்தகர் ஒருவருக்கு கும்பலொன்றினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர் அடாத்தாக காணிக்கு உரிமை கோரி வந்த நிலையில் கும்பலொன்றினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து குறித்த வர்த்தகரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிஸாருடனும் முரண்பட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் (30.07.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்ணின் மகன் என கூறப்படும் நபரால் தொடர்ச்சியாக இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
