ஜேர்மனியில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்
ஜேர்மனியில் WSO2 மென்பொருள் நிறுவனம் நடத்திய “WSO2CodeChallenge” போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நபர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜேர்மனியில் வாழும் பசிந்து ஜெயவீர என்பவர் டெஸ்லா சைபர் டிரக் காரை பரிசாக வென்றுள்ளார்.
இந்தப் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை புளோரிடாவின் செமினோல் ஹார்ட் ராக் ஹோட்டல் மற்றும் கேசினோ ஹாலிவுட்டில் நடைபெற்றது.
ஓப்பன் சோர்ஸ்
WSO2's cloud-native மென்பொருள் ஒரு சேவையாக மற்றும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருளாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் டிஜிட்டல் உருமாற்ற பயணங்களில் கருவியாக உள்ளது.
இதில் உலகின் நூற்றுக்கணக்கான பெரிய நிறுவனங்கள், முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
Tesla Cybertruck
ஆண்டுதோறும், WSO2 வியக்கத்தக்க 60 டிரில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த உதவுகிறது மற்றும் அதன் ஒரு பில்லின் வாடிக்கையாளர்களின் அடையாளங்களை நிர்வகிக்கிறது.
இந்நிலையில் நிறுவனம் நடத்திய WSO2CodeChallenge போட்டியில் பல நாட்டவர்கள் பங்குப்பற்றினர். இதில் இலங்கையரான பசிந்து டெஸ்லா நிறுவனத்தின் Tesla Cybertruck பரிசாக வென்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |