நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன்ட் கைது!
வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து நெடுங்கேணி பகுதிக்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்ப்பட்ட போது அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்றையதினம் (20.11) வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.