சிட்னியில் கிண்ணஸ் சாதனை படைத்த இலங்கையர்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் திமோத்தி சென்ன் ஜெபசீலன் வித்தியாசமான கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கையரான ஜெபசீலன், கிரிக்கட் பிடியெடிப்பு தொடர்பில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
மிகவும் உயரமான பிடியெடுப்பினை (Catch) எடுத்து கிண்ணஸ் உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 113.86 மீற்றர் அல்லது 393 அடி 2.897 அங்குலம் உயரத்திற்கு சென்ற பந்தினை பிடித்து இந்த சாதனை நிலைநாட்டியுள்ளார்.
கிண்ணஸ் உலக சாதனையாளராக மாற வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்த ஜெபசீலன், இந்த சாதனையை நிலைநாட்டி தனது கனவை மெய்ப்பித்துக் கொண்டுள்ளார்.
ஜெபசீலன், அறக்கட்டளை மூலம் இலங்கையில் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி நிலைநாட்டப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணஸ் உலக சாதனை புத்தகத்தில் ஜெபசீலனின் சாதனை பற்றிய விபரங்கள் உள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
