கொள்கலன்களில் வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அர்ச்சுனா எம்.பி
கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
அர்ச்சுனாவின் கருத்து அடிப்படையற்றது மற்றும் தவறானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
பாரிய சர்ச்சை
''அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன.
2009க்கு முன்னர் பிரபாகரன் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்'' இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
