மேற்கு ஆசியப் போர்நிறுத்தம்: இலங்கை அரசின் நெகிழ்ச்சி பதிவு
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தத்தை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறித்து இலங்கை அரசு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
போர்நிறுத்த அறிவிப்பு
மேற்படி அறிக்கையில்,
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், அங்குள்ள பொதுமக்களின் சொல்லொணா மனிதாபிமானத் துயரங்களைக் குறைப்பதற்கும் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த தருணத்தைப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகாலத் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய அமைதிப் பேச்சு முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கை அரசு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தப் போர் நிறுத்தம் சாத்தியமாவதற்கும், பேச்சுகளை ஆரம்பிப்பதற்கும் முன்னின்று உழைத்த சர்வதேசத் தரப்பினரின் இராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசு பாராட்டியுள்ளது.
நீண்டகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைக் காண்பதற்கு இந்தச் சூழல் வழிகோல வேண்டும் என்பதே இலங்கை அரசின் எதிர்பார்ப்பாகும்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri