இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியம்
இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டம் மற்றும் குறுகிய பற்றாக்குறையை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
அரச வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையிலான வரவு செலவுத்திட்டத்தையே சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இரண்டு வாரங்கள் தாமதமாக பணியாளர் அளவிலான உடன்படிக்கையை எட்டிய நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் அடுத்த ஆண்டு பற்றாக்குறையை குறைக்கவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதத்துக்கும் அதிகமான வருமானத்தை உறுதி செய்வதுமே சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கமாகும் என்று ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு செப்டம்பரில் 1.3 வீதமாக ஆக இருந்த பணவீக்கத்தை டிசம்பரில் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
