நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video)

Sri Lankan Tamils Jaffna Sri Lanka T saravanaraja
By Erimalai Oct 20, 2023 05:18 AM GMT
Report

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

ஏழு தமிழ் அரசியல் கட்சிகளால் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி, மந்திகையில் இன்று பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தைகள், கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நகரம்

மேலும், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி, ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி திறந்துள்ளன.


வடமராட்சி

பருத்தித்துறை நகரத்திலும் இன்று முழுமையாக கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை போக்குவரத்து சபை, அரச, தனியார் வங்கிகள், மருந்தகங்கள், உணவகங்கள் என்பன திறந்துள்ளன. 

நெல்லியடி நகரிலும் அனைத்து தனியார் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உணவகம், மருந்தகம், வங்கிகள் உட்பட அத்தியாவசிய சேவை நிலையங்கள் திறந்துள்ளன. 

மேலும் பருத்தித்திறை நகரில் உள்ள இரண்டு மதுபான சாலைகளும் வழமை போன்று திறந்திருந்தது.

தென்மராட்சி

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

தென்மராட்சியின் பிரதான நகரங்களான சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரங்களில் உள்ள மருந்தகங்கள் உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் சந்தை தொகுதிகளும் முற்றாக மூடப்பட்டிருந்தன.

இதே வேளை தவணைப் பரீட்சைகள் இடம்பெறுவதால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் கிரமமாக செல்வதையும் அவதானிக்க முடிந்தது. சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் சட்டத்தரணிகளின் புறக்கணிப்பால் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் உள்ள அரச தனியார் வங்கிகள் வழமை போன்று இயங்கிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

மேலதிக விபரங்கள் - கஜிந்தன்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பரந்தன் பகுதியிலும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது. முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது. சேவைச் சந்தையும் முழுமையாக முடங்கியது. 

மேலதிக விபரங்கள் - எரிமலை மற்றும் யது  

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

முல்லைத்தீவு

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.


அரச திணைக்களங்களின் சேவைகள், மருந்தகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் உணவகங்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொதுசந்தை முழுமையாக முடங்கிய நிலையில் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால், கல்விச் செயற்பாடுகள் வழமை போல இடம்பெற்றிருந்தது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. 

மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, விசுவமடு, மாங்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video) | Northern Province Harththal

மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் - ஷான்

வவுனியா

வடக்கு - கிழக்கில்  முன்னெடுக்கப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.

அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்பட்டது.

இதேவேளை அரச பேருந்துச்சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்றுவருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகளும் விலகியிருந்தனர்.

மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான நெடுங்கேணி,செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்ப்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்கள், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

மேலதிக தகவல் - திலீபன் 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US