பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கைத் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய காரணத்தால் அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தல் உத்தரவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்திருந்தது.
மேன்முறையீடு
எனினும் 2023ஆம் ஆண்டு அவர் செய்த மேன்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணை அண்மையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த இலங்கைத் தமிழருக்கு புகலிடம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத இலங்கையரை நாடு கடத்துவதில் உள்துறை அலுவலகம் தீவிரம் காட்டிய போதும், நீதிமன்றம் அதனை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 11 மணி நேரம் முன்

அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam
