பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Mullivaikal Remembrance Day United Kingdom
By Santhru May 19, 2025 07:13 PM GMT
Report

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவேந்தலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் ஒன்றிணைவோடு ஆரம்பமாகின நிகழ்வில் பிரித்தானிய கொடியினை சரோ பிரதேச கவுன்சிலர்  சசி மயிலவாகனம் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை  முகுந்தன் ஏற்றி வைத்துள்ளார்.

அடுத்ததாக இறுதி கட்ட போரில் உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது.

நினைவேந்தல் தூபி

அதனைத்தொடர்ந்து பிரதான நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச் செல்வம் உதய ராசாவின் புதல்வன் பவசுதன் உதயராசா ஏற்றி வைத்தார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemorated Uk

அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இளையோரான சௌமிகா புஷ்பராஜா ஆங்கிலத்தில் தன் உணர்வுகளை வெளி கொணர்ந்தார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemorated Uk

அதனைத்தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையின் தனது உணர்வுகளை கவிதையாக கிசானி விக்னேஸ்வர ராஜா  அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து தொழிற் கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க  பாலகிருஷ்ணன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேருரையினை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்கால் வலி சுமந்த மனிதம் வென்ற கணங்கள் எனும் நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemorated Uk

  இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US