இலங்கையின் பல முக்கியஸ்தர்கள் அமெரிக்காவில்! மோசமான நிலையில் காப்பாற்றுமா IMF (Video)
இலங்கையின் முக்கியஸ்தர்கள் பலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சர் செயலாளர் அவர்களுக்கு ஆலோசணை வழங்கக்கூடிய பொருளாதார நிபுணர்கள் எல்லோரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை சுமுகமாக இடம்பெறுவதாக தெரிவித்தாலும், IMFயின் அறிக்கை என்பது வித்தியாசமாக உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
IMF என்பது 1950ஆம் ஆண்டுகளில் அங்கத்துவ நாடுகளில் ஏற்படுகின்ற அன்னியச் செலவாணி பிரச்சினை அதாவது ஏற்றுமதி, இறக்குமதி இடைவெளிகளினால் ஏற்படும் நிலுவையை வர்த்தக பற்றாக்குறைகளின் போது உதவி செய்வதற்காகதான் உருவாக்கப்பட்டது.
ஐ. நா சபையில் இலங்கை 1955ஆம் ஆண்டு சேர்ந்த போதும், சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை 1950ஆம் ஆண்டே சேர்ந்து விட்டது. இப்போது பிரச்சினை என்னவென்று சொன்னால் இ்ப்போது நீங்கள் இந்தியாவிடம் இருந்து அல்லது சீனாவிடம் இருந்து கடன் பெற போகிறீர்கள் என்று சொன்னால் அங்கு இரண்டு நிபந்தனைதான் இருக்கும் ஒன்று வட்டிவீதம் எவ்வளவு? எவ்வளவு காலத்திற்கு திருப்பி செலுத்துவது,
ஆனால் சர்வதேச நாணய நிதியம் இதற்கு அப்பால் எம்முடைய நிதி பற்றாக்குறையை ஆராயும், ஏன் நீங்கள் எங்களிடம் வருகின்றீர்கள் என்ற காரணத்தையும் அது கண்டறியும் ஆகவே உங்களுடைய பொருளாதாரத்திலே சில பிரச்சிணைகள் இருக்கிறது. ஆகவே அதனை தீர்க்க வேண்டும் அவ்வாறு தீர்க்காவிட்டால் நீங்கள் திரும்ப திரும்ப எம்மிடம் வருவீர்கள் ஆகவே பொருளாதார பிரச்சினையை தீர்ப்பது ஒரு நிபந்தணையாக பார்க்கப்படுகிறது.
எனவே என்ன என்ன நிபந்தனைகளை நர்வதேச நாணய நிதியம் வைக்க்கூடும் என்பது வெளிப்படையானது,
1. வருமானத்தை கூட்ட வேண்டும் அது வருமான வரியை கூட்டுவதாக இருக்கலாம் அல்லது பெறுமதிசேர் வரியை கூட்டுவதாக இருக்கலாம்.
2. அன்னியச் செலவாணி மீதான கட்டுப்பாடுகள்.
3. படு கடனை உறுதி தன்மையுடன் பேண கட்டாயப்படுத்தல்.
4. மத்திய வங்கியின் சுயாதீன தன்மை பற்றியது.
என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



