அமெரிக்காவில் விபத்தில் சிக்கி இலங்கையர் பலி
அமெரிக்காவில் விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற கல்விபயின்று வரும் வினோஜ் யசிங்க ஜயசுந்தர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொட்டாவ மத்தேகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவர் கடந்த மாதம் 22ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு தனது ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையை வழங்க சென்ற போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கிளையில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |