அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட குழு காட்டுப் பகுதிக்கு இடமாற்றம்
அமெரிக்காவிலிருந்து பனாமாவிற்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கையர்கள் உட்பட சுமார் 100 புலம்பெயர்ந்தோர், அவர்களின் தடுப்பு முகாமிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பனாமா தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த குழு, நாட்டின் டேரியன் காட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பனாமா அரசாங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 299 குடியேறிகளில் 13 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடு கடத்தல்
மேலும் 175 பேர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும், அவர்கள் பனாமா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பனாமா அரசாங்கத்தின் கூற்றுப்படி, புலம்பெயர்ந்தோர் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
அமெரிக்காவுடன் இணைந்த சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் மூலம் அமெரிக்காவின் நிதி உதவியுடன் இருந்தனர்.
குடியேறியவர்களில் இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான், நேபாளம், பாகிஸ்தான், துருக்கி, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்று பனாமா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், பனாமா அந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பனாமாவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிரம்ப் நிர்வாகம் தற்போது குடியேறிகளை நாடு கடத்தி வருகிறது.
இராஜதந்திர உறவுகள் அல்லது பிற காரணங்களால் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மக்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை ஏற்க மறுக்கும் நாடுகளிலிருந்தும் குடியேறிகள் அமெரிக்காவிற்கு திரும்பி வருவதால், ட்ரம்ப் அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.