கொலைக்களமாகும் கொழும்பு! சசிக்குமார் மரணத்தின் பின்னணி
சமீபத்திய நாட்களில், புதிய அரசின் வரவு செலவு திட்ட பேச்சுவார்த்தைகள், சம்பள உயர்வுகள், பணமோசடி வழக்குகள், நாடாளுமன்ற பேச்சுக்கள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலக்கிண்ணம் போன்ற தலைப்புகள் அனைத்தும் ஊடகங்களில் இருந்து மாற்றம் பெற்றுள்ளன.
இவை அனைத்திற்கும் பதிலாக, நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, மித்தெனிய துப்பாக்கிச் சூடு, கொட்டாஞ்சேனையில் நடந்த சம்பவம் போன்றவையே தலைப்பு செய்திகளாக மாறியிருந்தன.
இந்த துப்பாக்கிச்சூடுகள் மக்கள் மத்தியில் கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் விசாரணை தீவிரமடையும் இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் இடம்பெற்ற தமிழர் ஒருவர் மீதான துப்பாக்கிச்சூடு மேலும் சில சலசலப்பை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் வரலாற்று ரீதியாக, நீண்டகால அரசியல் பாதுகாப்புடன் பாதாள உலகம் வளர்க்கப்படுவதன் விளைவாக இடம்பெறுவதாக அரசின், கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.
எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் இதை "பெரிய பாதுகாப்பு பிரச்சினை" என்று அழைத்தார்.
இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியானது இது தொடர்பில் ஆராய்ந்துள்ளது.
குறிப்பாக நேற்று இடம்பெற்ற தமிழர் ஒருவர் மீதான துப்பாக்கிச்சூட்டின் பின்னணி தொடர்பிலும், அது தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.