கனேடிய விமான விபத்து: பயணிகளுக்கான இழப்பீட்டை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனம்
கடந்த திங்கட்கிழமை (16)நடைபெற்ற கனேடிய விமானவிபத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் தலா 26 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின்(USA) மினியாபோலிஸ் நகரில் இருந்து டொரண்டோவிற்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பயணிகளுக்கான இழப்பீடு
விபத்தின் போது, விமானத்தில் 76 பயணிகளும், நான்கு பணியாளர்களும் இருந்தனர்.
இந்த விபத்தில் 20 பயணிகள் காயம் அடைந்ததுடன்3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற விமானத்தில் இருந்தவர்களுக்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |