மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை
மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உயிரிழந்த ஒருவரின் தாய், தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோலாலம்பூரில் Sentul கீழ் கோவில் கிராமத்தில் Perhentian வீதியில் உள்ள கடைவீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூவர் கொலை
நேற்றிரவு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்களாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri