இலங்கை போக்குவரத்து பேருந்து சாலை சாரதி - நடத்துனர்கள் போராட்டம்! (VIDEO)
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து பேருந்து சாலை சாரதி நடத்துனர்கள் இன்று (3) தங்களது முகாமையாளரை உடனடியாக இடம் மாற்றக் கோரியும் புதியதொரு முகாமையாளரை தங்களுக்கு நியமித்து தரும்படி கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் அதிக அளவிலான பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த முகாமையாளர் சாரதி நடத்துனர்களுக்கு இடையே முறுகல்நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குறித்த முகாமையாளர் தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தபோதிலும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் மீண்டும் இன்று அதிகாலை வீதியில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த முகாமையாளர் தொடர்பாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு தெரிவித்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய தினத்துக்குள் ஒரு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
