சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையில் இருந்து நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து வந்த தெற்கு இளைஞர்கள்

Sri Lankan Tamils Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lankan Peoples Buddhism
By S P Thas Dec 07, 2023 03:43 AM GMT
Report
Courtesy: S.P Thas

நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வரும் பயணத்தில் ஈடுபட்டனர்.

சர்வமத தலைவர்களின் உயர்ந்த பட்ச ஆதரவுடன் ''ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள்'' கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசாமி கோயில் வரை உள்ள அனைத்து சர்வமத தலைவர்களுக்கும் சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் என்னும் நிகழ்வானது கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை (Video)

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை (Video)

 சமாதானத்தின் செய்தி

சயோமோபாலிக மகா நிகாயே அஸ்கிரி மகா விகாரை பிரிவினரின் ராஜ பூஜித விங்சத் வர்கிக காரக சங்க சபிக கலாநிதி வணக்கத்துக்குரிய கெட்டகும்பரே தம்மாராம தேரரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. அதன்பின்னர் கண்டி கணதெவி கோயிலின் நம்பிக்கையாளர் சபை மாவில்மட இந்து கோவிலின் குருக்கள் ஆகியோருக்கு இந்த முன்மொழிவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையில் இருந்து நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து வந்த தெற்கு இளைஞர்கள் | Sri Lankan Buddhism Peoples Dalada Maligawa

அடுத்து மாவில்மட ஜும்மா பள்ளிவாசல் மெளலவி உட்பட நம்பிக்கையாளர் சபையைச் சந்திக்கச் சென்ற போது அவர்களுக்கு உயர்ந்தபட்ச வரவேற்பளிக்கப்பட்டது. சமாதானத்தின் செய்தியைப் பாதுகாக்கத் தாம் செயற்படுவதாக உறுதியளித்த அவர்கள் இளைஞர்களின் இந்த முயற்சி காலத்தின் தேவையாக அமைவதாகத் தெரிவித்தார்.

உடரட்ட அமரபுர நிகாயே மல்வத்து பிரிவின் அனுநாயக்க அலவத்துகொட கொனகலகல சிறீ சத்தானந்த மகா பிரிவெனே பிரிவேனாதிபதி வணக்கத்துக்குரிய கொனகலகல உதித தேரர் அனைத்து மதங்களையும் சேர்ந்த இளைஞர்கள் சமாதானத்தின் செய்தியை முன்னெடுக்க எடுக்கும் செயற்பாட்டை பாராட்டியதுடன், அடுத்த வருடம் தேர்தல்கள் நடைபெறும் வருடமாக அமைவதால் அரசியல் இலாபங்களுக்கு இனவாதத்தை பயன்படுத்தும் செயற்பாடுகளுக்கு இளைஞர்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டார்.

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையில் இருந்து நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து வந்த தெற்கு இளைஞர்கள் | Sri Lankan Buddhism Peoples Dalada Maligawa

அதன் பின்னர் மாத்தளை கொன்கஹவெல ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மற்றும் மெளலவியை சந்தித்த இவர்கள், பின்னர் மாத்தளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அலுவிகாரை விகாரையின் விகாராதிபதியை சந்தித்ததுடன் அதனை தொடர்ந்து சீயம் நிகாய ரங்கிரி தம்புளு பிரிவின் மகாநாயக்க தேரர் இனாமலுவே சிறீ சுமங்கல தேரரை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலஹாஹெங்குனவெவ தம்மரதன தேரரை சந்தித்த இவர்களுக்கு தேரர் நீண்ட அறிவுரைகளை வழங்கியதுடன் இவ்வாக்கபூர்வமான செயற்பாட்டுக்கு தனது ஆசீர்வாதம் மற்றும் ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனுராதபுரம் அட்டமஸ்த்தான ருவன்வெலிசாயவின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய ஈத்தல்வெட்டுனவெவ ஞானதிலக்க தேரர் அவர்களைச் சந்தித்து முன்மொழிவை வழங்கியதுடன் அதனை மேலும் விருத்தி செய்ய தேவையான முக்கியமான ஆலோசனைகளை இதன்போது வழங்கினார்.

இன முரண்பாடுகள் மற்றும் மத பிரச்சினைகள் காரணமாக துயரம் மற்றும் அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டல், அரசியல் கலாசாரத்தின் ஊடாக இனவாதம் மதவாதத்தை ஒழித்தல், வர்த்தக நோக்கத்துக்காக இனவாதம் மற்றும் மதவாதப் பிரச்சனைகளை ஏற்படுத்தலை தடுத்தல் மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பொது தளமொன்றைக் கட்டியெழுப்பல் போன்றன கலந்துரையாடப்பட்டதுடன், சர்வமதத் தலைவர்கள் அவர்களது பூரண ஒத்துழைப்பை நாட்டில் எதிர்காலத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப உதவுவதாக இதன்போது தெரிவித்தனர்.

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையில் இருந்து நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து வந்த தெற்கு இளைஞர்கள் | Sri Lankan Buddhism Peoples Dalada Maligawa

வவுனியாவுக்கு வருகை தந்த இளைஞர்கள் நான்கு மதத் தலங்களுக்கும் சென்று சமாதானத்தின் செய்தியைப் பரிமாறியதுடன் வவுனியா ஊடக அமையத்திற்கும் விஜயம் செய்து தமது கருத்துக்களைப் பரிமாறினர். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று பல்வேறு மதத்தலைவர்களையும் சந்தித்துடன், தமது பயணத்தை நல்லூர் ஆலயத்தில் நிறைவுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி

நான் கொலை செய்யப்படலாம்! ராஜபக்சர்களுக்கே என் உயிர் : சபையில் பகிரங்கமாக அறிவித்த ரோஹித

நான் கொலை செய்யப்படலாம்! ராஜபக்சர்களுக்கே என் உயிர் : சபையில் பகிரங்கமாக அறிவித்த ரோஹித

நுவரெலியா தபால் நிலைய கட்டடம் குறித்து வழங்கப்பட்டுள்ள அனுமதி

நுவரெலியா தபால் நிலைய கட்டடம் குறித்து வழங்கப்பட்டுள்ள அனுமதி

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US