நான் கொலை செய்யப்படலாம்! ராஜபக்சர்களுக்கே என் உயிர் : சபையில் பகிரங்கமாக அறிவித்த ரோஹித
மகிந்த ராஜபக்ச போல நாட்டுக்கு எவரும் இதுவரையில் சேவை செய்ததில்லை. இனி செய்யப் போவதுமில்லை. என்னை கொலையும் செய்யலாம். எனது உடலை இரண்டாக துண்டித்தாலும் எனது உயிர் ராஜபக்சர்களுக்கே என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்புக்கு அமைய முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவேண்டும் என்பதுடன் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பிற்போடப்படப்பட்ட குறித்த தேர்தல் எப்போது இடம்பெறும் என்பது தெரியாது.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம்
இந்த தேர்தல் இடம்பெறவில்லை எனில் நிச்சயம் அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும்.
எந்த தேர்தலுக்கும் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. நிச்சயம் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை எமது கட்சியிலிருந்து முன்னிறுத்துவோம்.

மொட்டுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் பொதுத் தேர்தல் மூன்றுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த மூன்று தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமே உள்ளது. நாமே அவருக்கு ஆதரவு வழங்கினோம். அடுத்த தேர்தல் வரும் வரையில் அவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். இடைநடுவில் குழப்பத்தை தோற்றுவிக்க மாட்டோம்.
இருப்பினும் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உருவாக்கிய கட்சியை உறுதியான கொள்ளைகளுடன் முன்னோக்கி கொண்டு செல்வோம்.
நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சியாக பொதுஜன பெரமுன காணப்படுகிறது. எதிர்காலத்தின் கட்சியின் எழுச்சிக்கு எமது பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர முன்னெடுத்து செல்வோம்.
எனக்கு பலர் அரசியல் ரீதியாக சேறு பூசும் வேலைகளை செய்யலாம். என்னை கொலையும் செய்யலாம். எனது உடலை இரண்டாக துண்டித்தாலும் என் உயிர் ராஜபக்சர்களுக்கே. மகிந்த ராஜபக்ச போன்று இந்த நாட்டுக்கு எவரும் இதுவரையில் சேவை செய்ததில்லை. இனியும் செய்யப் போவதும் இல்லை என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam